/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/polic5453.jpg)
உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிஷிகேஷில் சொகுசு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அங்கு வரவேற்பறையில் பணியாற்றிய 19 வயது இளம்பெண்ணை புல்கித் ஆர்யாவும், ஊழியர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்து ஆற்றில் வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் புல்கித் ஆர்யா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல் சில்லா கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, உடற்கூராய்விற்காக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இளம்பெண் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க உத்தரகாண்ட் மாநில டி.ஐ.ஜி.ரேணுகா தேவி தலைமையில் சிறப்பு விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சம்மந்தப்பட்ட ரிசார்ட்டை இடிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)