Published on 28/01/2022 | Edited on 28/01/2022
![Yediyurappa's granddaughter](http://image.nakkheeran.in/cdn/farfuture/HyiSVAMGcoqgasZrqZsYosHDrCi8MfzgX1a63rm318o/1643361114/sites/default/files/inline-images/edvdfs.jpg)
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யாவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
மருத்துவரான சௌந்தர்யாவுக்கு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீரஜ் என்ற மருத்துவரோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சௌந்தர்யாவின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.