"பாகிஸ்தான் வாழ்க" என கோஷம் எழுப்பிய அமுல்யாவுக்கு நக்சல் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

yeddyurappa about amulya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அமுல்யா என்ற பெண் "பாகிஸ்தான் வாழ்க" என கோஷமிட்டார்.

அவரை தடுத்து நிறுத்தஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அமுல்யா மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதுமிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையயடுத்து அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, "அமுல்யாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று அவரது தந்தையே கூறிவிட்டார். அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. நக்சல் அமைப்புடன் அமுல்யாவுக்கு தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என கூறினார்.