
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது கடந்த 15ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா வசப்படுத்தினார். இது உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா வென்ற முதல் வெள்ளிப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.