பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் முடிதிருத்தம் செய்து தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கு உணவளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் சுக்செயின் தேவி. இவருடைய கணவர் சண்டிகரில் வேலை பார்த்து வருகின்றார். ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் சில மாதங்களாக அங்கேயே சிக்கித் தவித்து வருகிறார். இதனால் பீகாரில் வசிக்கும் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சாப்பாட்டு கஷ்டப்பட்டு வந்துள்ளார்கள்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வந்த தேவி, சிறு வயதில் தனது அப்பா கற்றுக்கொடுத்த முடி திருத்தம் தொழிலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார். முடிவெட்ட தேவையான பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக போய் தேவையானவர்களுக்கு முடிவெட்டி விடுகின்றார். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றார். கணவர் வரும் வரை இந்த தொழிலை செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.