பெங்களூரை சேர்ந்தவர் ரமேஷ். கம்யூட்டர் வல்லுனரான அவருக்கு இணையதளம் வாயிலாக அவரது வீட்டினர் பெண் தேடி வந்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு அதே துறையில் அமெரிக்காவில் பணியாற்றும் ரேஷ்மி என்பவருக்கும், ரமேஷ்க்கும் திருமணத்தை இருவீட்டாரும் பேசி முடித்தனர். திருமணம் அடுத்தவாரம் திருப்பதியில் நடக்க உள்ள நிலையில், நேற்று முன்தின்ம் ரேஷ்மி திடீரென காணாமல் போனார். ரமேஷ் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் அவரால் ரேஷ்மியிடம் பேச முடியவில்லை.

Advertisment

இதனால் அவர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். காவல்துறையினர் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, ரமேஷ்க்கு மூக்கு பெரியதாக இருப்பதால் என்னால் அவரை திருமணம் செய்ய முடியாது என்று ரேஷ்மி தெரிவித்துள்ளார். இந்த செய்தி கேட்ட ரமேஷ் தான் திருமணத்துக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று கூறியும், ரேஷ்மி அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.