Skip to main content

உணவிற்காக குப்பையை கிளறும் காட்டு யானைகள்; அதிர்ச்சியில் விலங்குகள் நல ஆர்வலர்கள்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 wild elephants scavenging garbage for food; Animal welfare activists in shock

 

எட்டு உயிர்களை பலி கொண்ட அரிக்கொம்பன் யானை ஒரு வாரப் போராட்டத்திற்குப் பிறகு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த சின்னகானல் பகுதியில் நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது.

 

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதும், விளைநிலங்களை சேதம் செய்வதும் தொடர்ந்து நிகழும் சம்பவங்களாகவே தொடர்ந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சின்னத்தம்பி, விநாயகன் உள்ளிட்ட எவ்வளவோ யானைகளை சொல்லலாம். இந்த நிலையில் கேரளாவில் யானை ஒன்று தனது குட்டியுடன் குப்பை கூளங்களை கிளறி உணவு தேடும் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

அரிக்கொம்பனின் பூர்வீகமாக கருதப்படும் கேரள மாநிலம் சின்னகானல் பகுதியிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சின்னகானல் பகுதியில் ஊராட்சி குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள இந்த குப்பை கிடங்கில் தாய் யானை ஒன்றும் குட்டி யானை ஒன்றும் புகுந்து அங்கிருந்த குப்பை கழிவுகளை கிளறி உணவு தேடும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களது அதிர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.

 

பிளாஸ்டிக் கழிவுகளை யானைகள் உண்பதால் யானைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக அந்த இரண்டு யானைகளையும் மீட்டு வனத்திற்குள் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் வெறிச்செயல்; காதலியைக் கொன்று ஸ்டேட்டஸ் வைத்த காதலன் 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

boyfriend who incident his girlfriend and made a whatsapp status

 

காதலியைக் கொன்று தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த காதலனின் செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பவுசியா(20) என்ற நர்சிங் மாணவி சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். அதே கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக்(20) என்பவரும், பவுசியாவும் கடந்த 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், மாணவி பவுசியா கடந்த மூன்று நாட்களாகக் கல்லூரிக்குச் செல்லாமல் காதலன் ஆஷிக்குடன் வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹோட்டல் அறையில் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த சண்டை முற்றவே ஆத்திரமடைந்த காதலன் ஆஷிக், பவுசியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அதனை ஆஷிக் தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார். இந்த நிலையில் ஆஷிக்கின் ஸ்டேட்டஸை பார்த்து அதிர்ச்சியடைந்த பவுசியாவின் தோழி உடனடியாக குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹோட்டல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்த பவுசியாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பிக்க முயன்ற காதலன் ஆஷிக்கையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

குள்ளநரி கறி விருந்து; கம்பி எண்ணும் இளைஞர்! 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Youth arrested under Wildlife Protection Act in trichy

 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வயலூர் அருகே இனாம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

அதனைத் தொடர்ந்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷின் வழிகாட்டுதலின் படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உத்தரவின் படியும், திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இத்தனிப்படையினர், கடந்த நவம்பர் 29 அன்று இனாம்புலியூர் கிராம தெற்கு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சி. லட்சுமணன் என்பவரின் மகன் ல. அய்யர் (26) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அப்போது குள்ளநரியின் தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இது குறித்து அய்யரிடம் நடத்திய விசாரணையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இனாம்புலியூர் கிராம காட்டுப் பகுதியில் வேட்டை நாயை வைத்து குள்ளநரியை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட்டு, தோலை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. 

 

அதனைத் தொடர்ந்து அய்யர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அய்யரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அய்யர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்