Skip to main content

வினோத் காம்ப்ளி மீது மனைவி போலீசில் புகார்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Wife complains to police against Vinod Kambli

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. 51 வயதான இவர் மும்பை புறநகரான பாந்த்ரா மேற்கில் தனது மனைவி ஆண்ட்ரியாவுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் தனது கணவர் வினோத் காம்ப்ளி மீது ஆண்ட்ரியா புகார் அளித்துள்ளார். அதில் காம்ப்ளி தனது வீட்டில் இரவில் குடி போதையில் தன்னை அடிப்பதாகவும், சமையல் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வீசியதில் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் இதை அவர்களது மகன் நேரில் பார்த்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக பாந்த்ரா காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வினோத் காம்ப்ளி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் வினோத் காம்ப்ளி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், மும்பை காவல்துறையினர் காம்ப்ளியின் இல்லத்திற்குச் சென்று, முதல் தகவல் அறிக்கை தொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய காவல்துறையின் முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

வினோத் காம்ப்ளி 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1087 ரன்களையும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2477 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்