Skip to main content

யாருக்கு ஐந்து மாநிலங்கள்? வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

to whom five state; A post-election poll was released

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது.

 

இந்நிலையில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 102 முதல் 125 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 100 முதல் 123 இடங்கள் பெறும் எனவும் மற்றவை இடங்களை பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் 97 முதல் 107 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 118 முதல் 123 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் இடங்களை பெற வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளது.

 

தெலங்கானாவில் காங்கிரஸ் 48 முதல் 64 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பி.ஆர்.எஸ் 40 முதல் 55 இடங்கள் பெறும் எனவும், பாஜக 7 முதல் 13 இடங்கள் பெறும் எனவும், மற்றவை 4 முதல் 7 இடங்கள் பெறும் எனவும் ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.என்.என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் காங்கிரஸ் 56 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பி.ஆர்.எஸ் 48 இடங்கள் பெறும் எனவும், பாஜக 10 இடங்கள் பெறும் எனவும் மற்றவை 5 இடங்கள் பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தான் தேர்தல் குறித்து ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் பாஜக 100 முதல் 122 இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 62 முதல் 85 இடங்கள் பெறும் எனவும் மற்றவை 14 முதல் 15 வரையிலான இடங்களை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநில தேர்தல் குறித்து ஜான் கி பா  வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் காங்கிரஸ் 42 முதல் 53  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 34 முதல் 45 இடங்கள் பெறும் எனவும்மற்றவை 3 இடங்களை பெற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் சத்தீஸ்கரில்  காங்கிரஸ் 40 முதல் 50  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், பாஜக 36 முதல் 46 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் 1 முதல் 5 இடங்களை பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மிசோரம் மாநில தேர்தல் குறித்து ஜான் கி பா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் இசட்.பி.எம்  15 முதல் 25  இடங்கள் பெற்று வெற்றி பெறும் எனவும், எம்.என்.எஃப் 10 முதல் 14 இடங்கள் பெறும் எனவும், காங்கிரஸ் 5 முதல் 9  இடங்களை பெற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-மாரோ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மிசோரத்தில்  இசட்.பி.எம்  9 முதல் 15  இடங்களை பெற்று வெற்றி பெறும் எனவும், எம்.என்.எஃப் 14 முதல் 20 இடங்கள் பெறும் எனவும், மற்ற கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்