/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/FEW.jpg)
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழுமையான பயன்பாட்டில் உள்ளன. அதேசமயம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி சமர்ப்பித்தது. இதனையடுத்து விரைவில் கோவாக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுப்பது தாமதமாகிவந்தது. இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் 'நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு' கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தகவல் வெளியாகவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கப்படும் தடுப்பூசிகளை நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழுவும், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும்ஆய்வு செய்யும். அதன் பிறகேஅவசரகாலஅனுமதி குறித்தமுடிவு வெளியாகும். எனவே கோவாக்சின் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனத்தின்தொழில்நுட்ப ஆலோசனைக் குழு விரைவில் கூடி ஆய்வு செய்யவுள்ளது.
இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகாலஅனுமதி விரைவில் கிடைக்கும் என இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர், "கோவாக்சினுக்கு அவசரகாலஅனுமதி அளிப்பதுஒரு தொழில்நுட்ப செயல்முறை. நிர்வாக செயல்முறையோ அல்லது அரசியல் செயல்முறையோ அல்ல. கோவாக்சினை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் சமர்ப்பித்த தரவுகளை மதிப்பீடு செய்ய ஒரு தொழில்நுட்பக் குழு உள்ளது. அக்குழு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. சில பதில்கள் அளிக்கப்பட்டிருப்பதாக நம்புகிறேன். உலக சுகாதார நிறுவனத்திலிருந்து கோவாக்சினுக்கான ஒப்புதல் விரைவில் வரும் என்று நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)