கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அதன் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
அதிகளவு கோதுமைகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளான உக்ரைன், ரஷ்யாவில் போர் நீடிப்பதால், சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி இந்திய ஏற்றுமதியாளர்கள் விவசாயிகளிடம் அதிகளவு கோதுமையை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யத் தொடங்கின. அதனால் இந்திய உணவுக் கழகம், கோதுமை கொள்முதல் செய்வது குறைந்ததால் அதன் விலை உள்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியது.
உள்நாட்டு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதே நோக்கம் என்று கருதிய மத்திய அரசு, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதனால் உலகளவில் உணவுப் பற்றாக்குறை நிலவும் சூழல் ஏற்படும் எனக் கூறி ஜி 7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கோதுமையின் விலை ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவாக ஒரு டன் சுமார் 35,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.