Published on 02/05/2021 | Edited on 02/05/2021
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலவரப்படி திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுமென கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.