Published on 09/02/2019 | Edited on 09/02/2019

அங்கேலா மெர்கன்டைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் தனது நெருங்கிய நண்பர் என சிபிஐ யின் இயக்குனர் நாகேஸ்வர் ராவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் மேற்குவங்க காவல் துறை நேற்று காலை முதல் இரவு வரை சோதனை மேற்கொண்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனம் சட்ட விதிகளின்படி பதிவு செய்யவில்லை என கூறப்பட்டதால் இந்த ரெய்டு நடைபெற்றது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவின் மனைவி இந்த நிறுவனத்துடன் பண பரிமாற்றம் மேற்கொண்டதும் இதில் குறிப்பிடத்தக்கது. சிலநாட்களுக்கு முன் சிபிஐ அதிகாரிகள், மேற்குவங்க காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்த வந்து கைது செய்யப்பட்டதும், அதனை தொடர்ந்து மம்தா 3 நாட்கள் தர்ணா நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.