Published on 27/08/2018 | Edited on 27/08/2018

2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்புவிடுத்திருந்தது. இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி, வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.