பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் அவர் மனதின் குரல் நிகழ்ச்சியில், ''பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையானவர்களை வெளியே கொண்டு வரவேண்டும். மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சாதனைகள் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தலமாக விளங்குகிறது. மாமல்லபுரத்தில் முதலாம் மகேந்திர வர்மனால் கட்டப்பட்ட கோயிலும் அமைந்துள்ளது.
நாட்டிலேயே நகரப் பகுதிக்குள் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கம் சென்னை கலங்கரை விளக்கம் தான். கோவையில் பேருந்து நடத்துனர் யோகநாதன் பயணிகளுக்கு டிக்கெட் உடன் மரக்கன்றுகளை தருகிறார். தன்னுடைய வருமானத்தில் பெரும் தொகையை இதற்காக யோகநாதன் செலவிடுவது பாராட்டுக்குரியது. நாம் அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பேசினார்.