
குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. அவையில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ''இந்தியா தனது பிரச்சனைகளைத் தீர்க்க பிற நாடுகளைச் சார்ந்திருக்காது. உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறி உள்ளது. நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களைக் கொண்ட ஒரு தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். இந்த ஆண்டில் தன்னறிவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம்.
மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன. கரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு காரணமாக விளங்கியது. ஏழைகளுக்கும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தரவர்க்கமும், செழிப்பான இளைஞர்களும் முன்னிலையில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும். நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது'' என்றார்.