Skip to main content

லக்கிம்பூர் வன்முறை; ‘இதை செய்யாமல் முன்னோக்கி செல்ல முடியாது’ - உச்சநீதிமன்றம்!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

supreme court

 

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த முறை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ தவிர வேறு எந்த அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறுமாறு உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்தநிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உத்தரப்பிரதேச வழக்கறிஞர், வன்முறை தொடர்பான தற்போதைய நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் நீதிபதிகளோ, கடைசி நிமிடத்தில் அறிக்கையை தாக்கல் செய்தால் எப்படி படிப்பது என கேள்வியெழுப்பியதுடன், குறைந்தபட்சம் ஒருநாள் முன்னதாக அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும் எனக் கூறினர்.

 

இதனைத்தொடர்ந்து, 44 சாட்சியங்களில் 4 பேரின் வாக்குமூலத்தை மட்டுமே பதிவு செய்திருப்பது ஏன் என கேள்வியெழுப்பினர். அதற்கு உத்தரப்பிரதேச அரசு வழக்கறிஞர், வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடைமுறை நடைபெற்று வருவதாகவும், முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

உடனே நீதிபதிகள், எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த உ.பி  அரசு வழக்கறிஞர், விவசாயிகள் மீது கார் ஏறியது மற்றும் காரில் இருந்தவர்கள் கொல்லப்பட்டது என இரண்டு குற்றங்களில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக விவசாயிகள் மீது கார் ஏற்றிய குற்றத்திற்காக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.

 

இதனையடுத்து நீதிபதிகள், சாட்சிகளை விசாரிக்காமல் இந்த வழக்கில் முன்னோக்கி செல்ல முடியாது என கூறி, சாட்சிகளை பாதுகாத்து, அதிகம் பேரை விசாரிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

இந்த விசாரணையின்போது, 'நீங்கள் இந்த விஷயத்திலிருந்து காலை இழுத்துக்கொள்வதாக நாங்கள் நினைக்கிறோம். அந்த எண்ணத்தை போக்குங்கள்" உத்தரப்பிரதேச போலீசாரை குறிப்பிட்டு என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவால் வழக்கு; அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (15.04.2024) விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

Kejriwal case Supreme Court ordered the enforcement dept to respond

அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (15.04.2024) முடிவடைவதையொட்டி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Arvind Kejriwal Petition Hearing in Supreme Court

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (15.04.2024) விசாரிக்க உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.