Skip to main content

''அன்பால் எதிர்கொண்டோம்; கர்நாடகாவிற்கு காங்கிரஸ் துணை நிற்கும்'' - ராகுல் காந்தி பேட்டி

 

"We faced it with love; Congress will stand by Karnataka"-Rahul Gandhi interview

 

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

 

பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பெங்களூரு நகரில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தொடர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ''கர்நாடக தேர்தலுக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு கர்நாடக ஏழை மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது மக்களுக்கான வெற்றி. கர்நாடக தேர்தலை காங்கிரஸ் கட்சி வெறுப்புணர்வுடன் எதிர்கொள்ளவில்லை; அன்பால் எதிர்கொண்டோம்'' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !