ஆந்திர மாநிலத்தில் விஷ வாயுக் கசிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை விஷ வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியதால், அப்பகுதியில் சாலையில் சென்ற மக்கள் பலரும் மயங்கி கீழே விழுந்தனர். இந்த விஷவாயு கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. சாலையில் மயங்கி விழுந்த மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினர் விஷ வாயுவைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாகப்பட்டினத்தின் நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியுடன் பேசியுள்ளார். அப்போது மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Tragedy after tragedy hitting this country. Sad news from everywhere. #VizagGasLeakpic.twitter.com/VvzdNOKAze
— Sanghamitra (@AudaciousQuest) May 7, 2020