Published on 03/04/2019 | Edited on 03/04/2019

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படமான பி.எம் நரேந்திர மோடி படம் குறித்து ஒருசிலர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என எனக்கு புரியவில்லை என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். ஏன் இவ்வளவு சாதாரண ஒரு திரைப்படத்திற்காக சிறந்த மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி மற்றும் கபில் சிபல் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. மேலும் மோடி ஒரு ஹீரோ, எனக்குமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களுக்கான ஹீரோவாக அவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார். மோடியின் இந்த பயோபிக்கில் விவேக் ஒபராய்தான் மோடியின் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.