Skip to main content

பிள்ளையார் சுழி போட்ட கெஜ்ரிவால்...சாவர்க்கரில் வந்து நிற்கும் பாஜக - அனல் பறக்கும் ரூபாய் நோட்டு சர்ச்சை 

Published on 28/10/2022 | Edited on 28/10/2022

 

vinayakar to savarkar indian currency issue

 

இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் மட்டுமே இருந்து வரும் நிலையில்,  கடந்த சில நாட்களாக பலரும் ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். நாட்டில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள ரூபாய் நோட்டு விவகாரம் சமூக வலைதளங்களிலும்,  பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு விநாயகரை வைத்து பிள்ளையார் சுழி போட்டவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்து கடவுள்களான லட்சுமி, விநாயகர் ஆகியோர் படங்களையும் இந்திய ரூபாய் நோட்டில் அச்சிட்டால் நாடு மேலும் வளர்ச்சி அடையும், ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று மத்திய அரசிற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்திருந்தார்.

 

இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும் கண்டனமும் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை அடுத்து இந்திய ரூபாய் நோட்டில் வேறு சில தலைவர்களின் படங்களையும் சேர்த்து அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினரும் முன் வைத்துள்ளனர். அதில் சில இணையவாசிகள் ராமர் படத்தை ரூபாய் நோட்டில் வைக்க வேண்டும் என்று ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

அந்த வகையில் மேற்கு வங்க அரசியல் கட்சிகள் சார்பாக நேதாஜி படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அமைச்சர் நாராயணன் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநில எம்எல்ஏவுமான நிதிஷ் ரானே 200 ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி கூறும்போது “சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமைதான் அண்ணல் அம்பேத்கர். அவருடைய படத்தை ஏன் ரூபாய் நோட்டில் அச்சிடக்கூடாது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் அவரது ட்விட்டர் பதிவின் மூலம் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் படத்தை இந்திய ரூபாய் நோட்டில் அச்சடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமல்லாது சாவர்க்கர் படத்தையும் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபாநாயகர் உச்சரித்த பெயர்... சட்டென்று கிளம்பிய ஆளுநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The name pronounced by the speaker the governor who left suddenly

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்று (12.02.2023) காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

ஆளுநர் தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். 

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.