Published on 05/10/2022 | Edited on 05/10/2022

நவராத்திரி விழாவின் போது இடையூறு செய்ததாக இளைஞர்களை பிடித்த போலீசார் பொது வெளியில் வைத்து மக்கள் முன்னிலையில் லத்தியால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கேடா பகுதியில் நவராத்திரியை ஒட்டி 'கர்வா' நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது சில நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர். போலீசாரின் வாகனங்களும் சேதம்டைந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 9 பேரை இது தொடர்பாக கைது செய்தனர். அந்த 9 பேரையும் மக்கள் முன்னிலையில் நிற்க வைத்து பின்புறத்தில் லத்தியால் தாக்கி அதை வீடியோவாக பதிவு செய்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.