Skip to main content

பத்தாயிரத்திற்காகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பொய் புகாரளித்த பெண்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

police

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சலே நகரைச் சேர்ந்த விவாகரத்தான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ஒருவரும், அவரது இரண்டு நண்பர்களும் சேர்ந்து தன்னை கூட்டுப் பாலியல் கொடுமை செய்துவிட்டதாகக் கூறி போலீஸாரிடம் புகார் அளித்தார்.

 

இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தான் அளித்த புகார் போலியானது எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காகப் புகார் அளித்ததையும் அந்த பெண்ணே ஒப்புக்கொண்டுள்ளார்.

 

புகார் அளித்த பெண், தான் குற்றஞ்சாட்டிய நபர்களில் ஒருவரிடமிருந்து மளிகை பொருட்களுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் பணம் வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் 10,000 ரூபாய் கடனாக கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் பணம் தர மறுக்கவே, அவரை பயமுறுத்தி பணம் வாங்குவதற்காக அந்த பெண் தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் அந்த பெண் இதனை தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து அந்த பெண் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸார், சட்ட ஆலோசனையை கேட்டுள்ளனர். பொய் புகாரளித்த அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்