இந்தியாவில் கரோனா பாதிப்பு 538 நாட்களுக்குப் பிறகு வெகுவாக குறைந்துள்ளது. கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கம் தற்போது சீராக குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,45,18,901 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் கரோனா பாதிப்பில் இருந்து 12,510 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இந்தியாவில் 249 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,65,911 ஆக அதிகரித்துள்ளது. கரோனா கண்டுப்பிடிக்கப்பட்டு சில வாரங்கள் வரை கட்டுக்குள் இருந்த அதன் வீச்சு, அடுத்தடுத்த வாரங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்த நிலையில், 538 நாட்களுக்குப் பிறகு கரோனா மீண்டும் வெகுவாக குறைந்திருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.