Skip to main content

ரஃபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

raf

 

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பா.ஜ.க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் விமானங்களை வாங்க பேசப்பட்ட தொகையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடி அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.  இதனையடுத்து ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மீ சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோஸப் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது. அதில், 'பிரான்ஸின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை. மேலும் நம் நாட்டுக்கு போர்விமானங்கள் என்பது அவசியமான ஒன்று, அதுபோன்ற விமானங்கள் இல்லாமல் நாடு இருக்க முடியாது. எனவே, இந்த ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்தக் காரணமும் இல்லை. மேலும், போர்விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல' என கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்