Skip to main content

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை- 34 பேர் உயிரிழப்பு!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

uttarakhand statet heavy rains and floods peoples

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். வெள்ளப்பெருக்கால் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா 1.9 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் அறிவித்துள்ளார். 

 

இதனிடையே, ஹெலிகாப்டர் மூலம் வெள்ள சேதங்களைப் பார்வையிட்ட உத்தரகாண்ட் முதலமைச்சர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

uttarakhand statet heavy rains and floods peoples

 

பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது. 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்