அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிக் கண்டுள்ளது.
அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிந்து, 82 ரூபாய் 33 காசுகள் ஆனது. இதனால் இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவைகளை அதிக விலைக் கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகின்றனர். மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 160 புள்ளிகள் குறைந்து 58,061 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 50 புள்ளிகள் இறங்கி 17,284 புள்ளிகளிலும் வணிகமாகின.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 94.33 டாலரில் வர்த்தகமாகியது.