Published on 19/08/2019 | Edited on 19/08/2019
பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் குற்றம்சாட்டிய உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் கடந்த மாதம் தனது தாய், அத்தை மற்றும் வழக்கறிஞர் ஆகியோருடன் ரேபரேலி நோக்கி காரில் சென்ற போது லாரி ஒன்று மோதியது.

இதில் அப்பெண்ணின் தாய் மற்றும் அத்தை உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த அந்த பெண்ணும், அவரது வழக்கறிஞரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்து குறித்து தன்னுடைய உறவினர்களிடம் அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி அப்பெண், லாரி மிக வேகமாக தங்களை நோக்கியே வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ''லாரிக்குள் சிக்கியதும் காரை மீண்டும் பின்னோக்கி எடுத்து வெளியே வர முயற்சிக்குமாறு வழக்கறிஞரிடம் சொன்னேன். ஆனால் லாரி மீண்டும் மீண்டும் எங்கள் மீது மோதியது'' என தெரிவித்துள்ளார்.