உன்னாவ் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காரை குற்றவாளி என கூறி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

unnao case verdict by tiz hazari court

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னோவ் பகுதியை சேர்ந்த 17 வயதான பெண் ஒருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது வேலை குறித்து கேட்க எம்.எல்.ஏ குல்தீப் செங்கர் வீட்டிற்கு சென்றபோது அவரை எம்.எல்.ஏ குல்தீப் பாலியல் கொடுமை செய்ததாக அப்பெண் கடந்த ஆண்டு காவல்துறையில் புகாரளித்தார். அந்த வழக்கில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.

Advertisment

இதனை தொடர்ந்து குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் தந்தை காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் தந்தை இறப்பிற்கு சாட்சியமாக இருந்த நபரும் மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தாய் மற்றும் அத்தையின் பாதுகாப்பில் அப்பெண் வாழ்ந்து வந்த சூழலில், லாரி மோதி அப்பெண்ணின் தாயும், அத்தையும் சமீபத்தில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக குல்தீப் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் பாலியல் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த டிஸ் ஹசாரி நீதிமன்றம், பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரை குற்றவாளி என அறிவித்தது. எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கான தண்டனை குறித்த விவரம் நாளைஅறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொருவரான சஷி சிங்கை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Advertisment