Skip to main content

நடுவானில் விமான பயணிக்கு உடல்நலக் கோளாறு... சிகிச்சையளித்த மத்திய அமைச்சர்!

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

Union Minister treats air traveler's health problem in Naduvan!

 

நடுவானில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மத்திய அமைச்சர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

 

டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்று கொண்டிருந்த 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ந்த விமானப் பணிப்பெண் விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் உள்ளனரா என உதவி கேட்டார். அப்போது விமானத்தில் அதே விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரேவும் பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவித்து 'ஏர் இந்தியா' நிறுவனம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் பயணிக்கு சிகிச்சை அளிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரான மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் அவுரங்காபாத்தில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக எந்த மாநில அரசும் இல்லை ” - மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Minister Subhas Sarkar says No State Government is against the National Education Policy

 

சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று (10-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு, உட்கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார். 

 

அதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அளவில் இருந்து சர்வதேச அளவுக்கு இயங்க தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தை தேடி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து பல பேர் இந்த நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். இந்தியாவில் கல்வித் தரம் உயர்ந்துள்ளது. 

 

நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியிருக்கிறோம். இதற்கு எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேசிய கல்விக் கொள்கைகளில் சில உள்ளீடுகளை கொண்டு வர பரிந்துரை செய்தார்கள். அதனை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நன்மை பெற்று வருகிறார்கள்” என்று கூறினார். 

 

 

Next Story

போர் பதற்றம்; விமான சேவை ரத்து!

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

air india Flight to Tel Aviv canceled

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.