மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் வந்துக் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஹைட்ரஜன் கார்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த 2015- ஆம் ஆண்டு டொயோட்டா நிறுவனம், முதன் முதலாக ஹைட்ரஜனில் இயங்கக் கூடிய வாகனங்களை அறிமுகம் செய்தது. 2020- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் முதன்முறையாக ஹைட்ரஜன் கார் சோதனை நடத்தப்பட்டது. 2021- ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கண்காட்சியில் டொயோட்டா நிறுவனத்தின் ஹைட்ரஜன் கார் காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, தனது வீட்டில் இருந்து நாடாளுமன்றத்துக்கு ஹைட்ரஜன் காரில் புறப்பட்டார்.
புறப்படும் முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, பசுமை ஹைட்ரஜன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக குறிப்பிட்டார். விரைவில் இந்தியா பசுமை ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறும். பசுமை ஹைட்ரஜன் தண்ணீரில் இருந்து உருவாக்கப்படுவது, வாகனத்தை இயக்கவும், பயன்படுவது என்று மத்திய அமைச்சர், பசுமை கழிவுகளில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்திச் செய்வது, தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.