
தொகுதி மேம்பாட்டு நிதிக்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் அனில் ஃபிரோஜியா 18 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் உடல் பருமனாக இருந்த உஜ்ஜைன் தொகுதியின் மக்களவை உறுப்பினரான பா.ஜ.க.வைச் சேர்ந்த அனில் ஃபிரோஜியாவிடம் ஒரு கிலோ எடையைக் குறைத்தால், தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூபாய் 1,000 கோடி ரூபாய் தருவதாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட அவர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது, 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
அதாவது, பிப்ரவரி மாதத்தில் 127 கிலோ இருந்ததாகவும், தற்போது 112 கிலோவுக்கு எடையைக் குறைந்திருப்பதாகவும் அனில் ஃபிரோஜியா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 15,000 கோடி ரூபாயை வழங்குமாறு நிதின் கட்கரியிடம் அவர் முறையிட்டுள்ளார்.