Skip to main content

மத்திய சட்டத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இணை அமைச்சரும் மாற்றம்! 

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

The Union Minister of Law has been changed and the Deputy Minister has also been changed!

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் கிரண் ரிஜ்ஜு. கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது மத்திய சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். சமீப காலமாக நீதிபதிகளுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 

 

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்ட அமைச்சராகப்  பதவியேற்றுள்ளார்.

 

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவைத் தொடர்ந்து இணை அமைச்சராக இருந்த எஸ்.பி. சிங் பாகேல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இருவரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்