தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது 23 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் கரோனா குறித்த அச்சத்தால், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதேபோல் சில நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டவர் வருவதற்குத் தடை விதித்துள்ளன.
அதேபோல் இந்தியாவும் சர்வதேச வர்த்தக விமானப் போக்குவரத்தை தொடங்குவதை ஒத்திவைத்துள்ளது. இந்தச் சூழலில், விமான நிலையத்தில் பயணிகளைக் கண்காணிப்பது மற்றும் பரிசோதனை செய்வது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விமான நிலைய பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள் பங்கேற்பார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.