Published on 18/11/2021 | Edited on 18/11/2021
பிரதமர் மோடி தலைமையில் நேற்று (17.11.2021) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தொலைத்தொடர்பு வசதி இல்லாத, ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 44 மாவட்டங்களில் உள்ள 7,266 கிராமங்களில் தொலைபேசி டவர்கள் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தக் கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த டவர்கள் மூலம் இந்தக் கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 6,466 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் 18 மாதங்களில் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, ஒடிசா ஆகியவை இந்தத் திட்டத்தால் பயனடையவுள்ள ஐந்து மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.