Skip to main content

'உக்ரைனுக்கு அமைதி வேண்டும்; பசுமை இல்ல வாயுக்களை குறைக்க வேண்டும்'- ஜி20 மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

bb

 

டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோன்று பிரகதி மைதானத்தின் முன்பு தமிழகத்தின் 27 அடி உயர நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

 

மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

 

இந்த ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்ததுள்ளனர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தல், ஐநா சபையின் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்துவதற்கான தீர்மானம். ஜி 20 உறுப்பு நாடுகளுக்கு இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும் செலவைக் குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ மற்றும் அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர தீர்மானம். பாலின இடைவெளியைக் குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரசுடன் கூட்டணி; ஆம் ஆத்மிக்கு மிரட்டல்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Alliance with Congress Threat to AAP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும் அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அதன்படி டெல்லியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அடிசி, பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தொகுதிப் பங்கீடு ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால் சிபிஐயிடம் இருந்து 41 ஏ பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்படும் என மிரட்டுகின்றனர். இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறாவிட்டால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார் என செய்தி வந்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையைக் கண்டு பாஜகவும், பிரதமர் மோடியும் மிரண்டு போய் உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

டெல்லி போராட்டம்! டெல்டாவில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Delta farmers have  tractor rally in support of the struggling farmers in Delhi

விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடு! என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

டெல்லி எல்லைக்குள் விவசாயிகளை நுழையவிடாமல் மத்திய அரசு கம்பிவேலி தடுப்புகளையும் தடுப்பு சிமெண்ட் கட்டைகளையும் வைத்து தடுத்துப் பார்த்தனர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தாண்டிச் செல்ல முயன்றனர். அதனால் தடுப்பு சுவர்களை எழுப்பி விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர், ரப்பர் குண்டுகளையும் மழைபோல வீசி தாக்கினர். இந்த தாக்குதலின் போதே பேச்சுவார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடந்த தாக்குதலில் கியான்சிங் என்ற 65 வயது விவசாயி பலியானார்.

தொடர்ந்து விவசாயிகள் மீதான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இந்தியா முழுவதும் இருந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் கூடத் தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக டெல்டா மாவட்டத்திலும் போராட்டம் நடத்த முடிவு செய்து நாளை காலை புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையான ஆவணம் கைகாட்டியில் நான்கு சாலைகளிலும் டிராக்டர்களில் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் செய்ய தயாராகி வருகின்றனர். இதே போல தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடத்த ஆலோசித்து வருகின்றனர்.