Published on 09/04/2022 | Edited on 09/04/2022
படிப்பை முடித்த ஆறு மாதங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழுவின் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், படிப்பை முடித்த பின்னரும் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டம் வழங்காமல் பல கல்வி நிறுவனங்கள் இழுத்தடிப்பதாக மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. படிப்பை முடித்த 180 நாட்களில் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளது.