கேரளா மாநிலம் எர்ணாகுளம் திருவாழா பகுதியில் வசித்து வருபவர் பக்வந்த் சிங். இவர் திருவாழா பகுதியில் மசாஜ் சிகிச்சையாளராக உள்ளார். இவரது மனைவியின் பெயர் லைலா. இவர்களுக்கு தங்களது செல்வ வலம் பெருக வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாக இருந்துள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு முகமது ஷபி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவரிடம் தங்களது ஆசையை கூறிய தம்பதிக்கு முகமது ஷபி ஒரு யோசனையை கூறியுள்ளார். அதன் படி நரபலி கொடுத்தால் பணக்காரராக வாழலாம் என்றும் தொடர்ந்து தம்பதியை மூளைச்சலவை செய்து வந்துள்ளார். இறுதியில் தம்பதிகள் ஒப்புக்கொண்டனர். இதன் பின் அந்த தரகர் கடவந்தரா பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க லாட்டரி விற்கும் ரோஸ்லின் என்ற பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
சில தினங்களில் லாட்டரி விற்கும் பெண்ணை காணவில்லை என கூறி அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். காவல் துரையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண் நரபலி கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. காவல் துறையினர் பக்வந்த் சிங், லைலா மற்றும் அந்த தரகரிடம் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண்ணை பக்வந்த் சிங்கின் வீட்டிற்கு தரகர் மூலம் அழைத்து வந்து மூவரும் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது.
லாட்டரி விற்கும் ரோஸ்லினை நரபலி கொடுத்த பின் உடலை துண்டுகளாக வெட்டி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் புதைத்துள்ளனர். அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை மேலும் விசாரித்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உன்மைகள் வெளிவந்தது.
முதல் பெண்ணை ஜூலை மாதம் நரபலி கொடுத்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பத்மா எனும் மற்றொரு பெண்ணை நரபலி கொடுத்துள்ளனர். இந்த பெண்ணும் லாட்டரி விற்பனை செய்யும் பெண். இவரையும் அந்த தரகர் தான் அழைத்து வந்துள்ளார். இவரையும் துண்டுகளாக வெட்டி ஆள் நடமாட்டமற்ற பகுதியில் மூவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.