Skip to main content

மீண்டும் ரயில்கள் மோதி கோர விபத்து- ஆந்திராவில் சோகம்

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

 Trains collide accident- Tragedy in Andhra Pradesh

 

ஆந்திராவில் சிக்னல் கோளாறு காரணமாக இரண்டு ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ராயகடா செல்லக்கூடிய பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தை நோக்கி சென்ற பொழுது சிக்னல் கோளாறு காரணமாக நின்றது. அப்போது பின்னால் வந்த பலாசா விரைவு ரயில் பாசஞ்சர் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் முதல் கட்டமாக ஆறு பேர் உயிரிழந்ததாகவும்,15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

 

இந்த விபத்தில் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கவும் ஆந்திர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவலை தெரிந்துகொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒடிசாவில் பாலசோரில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்பொழுது ரயில் விபத்து நடந்துள்ள இடத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளது.

 

உதவி எண்கள்: புவனேஷ்வர் 0674-2301525, 2303069, வால்டெய்ர் -0891-2885914, 89127 46330, 89127 44619, 81060 53051, 81060 53052, 85000 41670, 85000 41671, ஸ்ரீகாகுளம்  0891-2885911, 2885912, 2885913, 2885914.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளிச் சுவர் இடிந்து விபத்து; அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
School wall collapse accident in gujarat

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து, வகுப்பறையில் இருந்து வெளியேறினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வதோதரா தீயணைப்பு துறையினர், சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு மாணவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

 கடலூர் துறைமுகம் - மைசூர் விரைவு ரயிலுக்குச் சிதம்பரத்தில் மலர் தூவி வரவேற்பு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Cuddalore Port - Mysore express train welcomed with flowers at Chidambaram

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலைச் சிதம்பரம் வழியாகக் கடலூர் துறைமுகம் வரை இயக்க வேண்டும் எனச் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம், சிதம்பரம் வர்த்தக சங்கம், உள்ளிட்ட சிபிஎம் சிபிஐ விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி, சமூக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையொட்டி ரயில்வே நிர்வாகம் ஜூலை 19-ஆம் தேதியிலிருந்து மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் என அறிவித்தது.  இந்த ரயில் கடலூர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை மாலை சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அனைத்து கட்சிகள் சார்பில் மலர் தூவி வரவேற்று கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ரயில் பயணிகள் சங்கம், சி.பி.எம், சிபிஐ, எஸ்.எப்.ஐ, வி.சி.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில் பயணிகள் சங்கத்தில் தலைவர் முகமது ரியாஸ், “சிதம்பரம் ரயில் நிலையத்தில் செங்கோட்டைக் கம்பன் உள்ளிட்ட ரயில்கள் நிற்காமல் செல்கிறது. இதனை உடனடியாக நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் கோயம்புத்தூர் வரை செல்லும் ஜன் சதாப்தி ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் காலை நேரத்தில் திருச்சிக்குச் செல்வதற்கு ஏற்றார் போல் ரயிலை ஏற்க வேண்டும்” எனக் கூறினார்.