Skip to main content

குடும்பத்தையே பலி கொண்ட ஆன்லைன் கடன் செயலி; மார்பிங் புகைப்படத்தால் நேர்ந்த துயரம்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

nn

 

ஆன்லைன் கடன் செயலியில் கடன் வாங்கியவரின் மனைவியின், மார்பிங் செய்த புகைப்படத்தைப் பரப்பியதால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடம்பகுடி பகுதியைச் சேர்ந்தவர் நிஜோ-ஷில்பா தம்பதியினர். இரு குழந்தைகளுடன் வீட்டின் மாடி பகுதியில் இருவரும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். தரைதளத்தில் நிஜோவுடைய பெற்றோர் வசித்து வந்தனர். தினமும் தரைதளத்தில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டில் பேரக் குழந்தைகள் விளையாடுவதற்காகக் கீழே வரும் நிலையில், நேற்று குழந்தைகள் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நிஜோவின் தாயார் மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்பொழுது, கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், குழந்தைகள் இருவரும் கட்டிலில் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனர்.

 

இதனால் அதிர்ந்து போன நிஜோவின் தாயார் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ஏற்கனவே கடன் சுமை இருந்த நிலையில் செல்போனில் வந்த விளம்பரத்தை நம்பி கடன் செயலின் மூலம் கடன் வாங்கியதாகவும் வாங்கிய கடனை அடைக்காததால் மர்ம கும்பல் நிஜோவின் மனைவி நிர்வாணமாக இருப்பதுபோல் மார்பிங் செய்து சிலருக்கு அனுப்பி உள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தால் குழந்தைகள் இருவரையும் தம்பதியினரே கொன்றுவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

 

 

சார்ந்த செய்திகள்