சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக லாரியை நிறுத்தி சென்றதாக லாரி க்ளீனரை போக்குவரத்து போலீசார் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பதி அன்னமய்யா சர்க்கல் என்ற பகுதியில் சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ஒன்று சாலையிலேயே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.அப்பொழுது அங்கு பணியிலிருந்த கிஷோர் நாயுடு என்ற போலீசார் லாரியை எடுக்குமாறு கூறியுள்ளார். அப்பொழுது லாரி கிளீனர் மது போதையில் இருந்ததை அறிந்த காவலர் கிஷோர் நாயுடு அவரை எட்டி உதைத்தார்.
அப்பொழுது கிளீனர் காவலரிடம் ஆத்திரமாக பேச காவலர் கிஷோர் மீண்டும் துரத்தி சென்று எகிறி குதித்து எட்டி உதைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கண்டனத்தைப் பெற்றுள்ளது. விதியை மீறினால் வழக்குப்பதிவு செய்யலாம் அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் அதனை விடுத்து சாலையில் ஷூ காலால் எப்படி எட்டி உதைக்கலாம் என சமுக ஆர்வலர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.