Skip to main content

'அணை பாதுகாப்பு' மசோதா மக்களவையில் நிறைவேறியது!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

அனைத்து மாநிலங்களில் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வழிவகை செய்யும் அணை பாதுகாப்பு மசோதா, பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தமிழக துணை முதல்வரின் மகனும், அதிமுகவை சேர்ந்த தேனி மக்களவை தொகுதி உறுப்பினர் எம்.பி ரவீந்திரநாத் குமார், அணை பாதுகாப்பு மசோதாவை தொலைநோக்கு பார்வையில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார்  அதே போல் அணை பாதுகாப்பு மசோதாவானது. அணைகளை பாதுகாக்கவும், நீரை சமமாக பெறுவதற்கும், இந்த மசோதா உதவும்  என்றார்.

 

TODAY PARLIAMENT SESSION UAPA BILL AND DAM SAFETY BILL PASSES DELHI


 

ஏற்கனவே மாநிலங்களவையில் இன்று உபா சட்டத்திருத்த மசோதாவை (UAPA BILL), மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கொண்டு வந்தார்.  இந்த மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பிறகு  நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் கிடைத்த நிலையில் மசோதா நிறைவேறியதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார். உபா சட்டத்திருத்த மசோதாவானது, சட்ட விரோத செயல்பாடு தடுப்பு சட்டமாகும். தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்றும், சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் உறுதி அளித்தார். UAPA- சட்டத்திருத்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியிருப்பதால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
BJP MPs are protesting in the Parliament complex

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுயும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை இடமாற்றம் செய்தது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பினார். அப்போது அவரது மைக் ஆப் செய்யப்பட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மைக்கின்றி திருமாவளவன் தனது பேச்சை தொடர்ந்தார். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை சபாநாயகர் ஓம்பிர்லா பொறுத்துக்கொள்ள மறுப்பதாகவும் புகார் தெரிவித்தனர். 

BJP MPs are protesting in the Parliament complex

அதே சமயம் அவசர நிலை குறித்தும், இந்திரா காந்தியை கண்டித்தும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சு சர்ச்சையை எற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சபாநாயகரை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது நடந்தவற்றை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி கூறியதை சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டதற்கு மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதற்கு தெரிவித்து மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட நாள் ‘கருப்பு தினம்’ என்றும் மோசமான காலம் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை கண்டித்து பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

காதலித்து ஏமாற்றிய இளைஞர்; முகத்தை சிதைத்த இளம்பெண்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
young woman who threw liquid on the face of boyfriend in delhi

டெல்லியின் புறநகர் பகுதியான நிகல் விகார் பகுதியில் வசிப்பவர் ஓம்கார்(24). கிராபிக் டிசைனராக இருக்கும் ஓம்காருக்கும், அவருடன் பணி செய்த 30 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இருவரும் 3 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் காதலி, ஓம்காரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு வயதை காரணம் காட்டி காதலியை ஓம்கார் நிராகரித்துள்ளார். 

இதனால், மனம் உடைந்த அந்த பெண் தன்னை ஏமாற்றிய ஓம்காரை பலிவாங்க முடிவு செய்து, ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்து கூலிப்படையை அமர்த்தியுள்ளார். ஓம்கார் முகத்தில் திரவத்தை(ஆசிட்) ஊற்றி சிதக்க வேண்டும் என்று அவர்களிடம் காதலி கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த ஓம்காரை கூலிப்படையினர் வழிமறித்து முகத்தில் திரவத்தை ஊற்ற முயன்றுள்ளனர். ஆனால் அது முடியாமல் போனதால், கையில் வைத்திருந்த கைத்தியை எடுத்து ஓம்காரின் முகத்தில் சரமாரியாக கிழித்து சிதைத்துள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்த ஓம்காரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வத்தனர். பின்னர் ஓம்கார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்பு கூலிப்படையை சேர்ந்த விகாஷ்,பாலி, ஹர்ஷ்,ரோகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஓம்காரின் காதலிதான் இந்த சம்பவத்தை அரங்கேற்றினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஓம்காரின் காதலியை கைது விசாரணை நடத்தியபோது, “நிச்சயதார்த்தத்தை நிறுத்துமாறு ஓம்காரிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து நான் எதிர்ப்பு தெரிவித்தால், தன்னுடன் எடுத்துகொண்ட அந்தரங்க படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். அதனால்தான் அவரை பழிவாங்க கூலிப்படையை அமைத்தேன்” எனத் தெரிவித்தார்.