
இந்தியாவில் இதுவரை 3.11 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (20.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 30,093 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரேநாளில் 42,254 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.32 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.33 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 374 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,06,130 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.