Published on 20/07/2021 | Edited on 20/07/2021
![ர](http://image.nakkheeran.in/cdn/farfuture/TUb9Ryv8lQwUmUDho6bz3E5zL7xzGrBE827D62-YjBk/1626798512/sites/default/files/inline-images/aaaaaaafh_100.jpg)
இந்தியாவில் இதுவரை 41.52 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31.79 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41,52,25,632 ஆக உயர்ந்துள்ளது. இதில், 32,85,33,933 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 8,66,91,699 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.