ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எஸ்.ஜே.எம். எனப்படும் சுதேசி ஜக்ரான் மஞ்ச் என்ற அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

tik tok

Advertisment

Advertisment

சுதேசி ஜக்ரான் மஞ்ச் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘டிக்-டாக்’, ‘ஹலோ’ ஆகிய செயலிகளில், நம் தேசத்துக்கு எதிரான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, ‘டிக்-டாக்’ மற்றும் ‘ஹலோ’ உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும். சில சீன நிறுவனங்கள், தவறான கருத்துகளை பரப்பி இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன. எனவே நமது தேச பாதுகாப்பை, பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றி இதுபோன்ற செயலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.