வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுரா மாநிலத்திற்கு கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்குப் பிறகான இந்தத் தேர்தலின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது காங்கிரஸ். அதேபோல் தீவிரப் போட்டியில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
காலை 8.30 நிலவரப்படி திரிபுராவில் பாஜக 22 இடங்களிலும், கம்யூனிஸ்ட் 8 இடங்களிலும், திப்ரா 12 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. மேகாலயாவில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், என்.பி.எப் 28 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. நாகாலாந்தில் பாஜக 20 இடங்களிலும், என்.பி.எப் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது.