Skip to main content

ஓடும் காரில் பாலியல் தொல்லை; கண்டுகொள்ளாத போலீஸ்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Three people were arrested for misbehaving with the girl in the car

 

சிறுமியைக் கடத்தி ஓடும் காரிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் பகுதியில் 16 வயதான சிறுமியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் கப்தங்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் முதலில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர். 

 

இதனைத் தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குஷிநகர் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

 

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி, “நான் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றபொழுது, ஒருவர் என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகிலிருந்த குடிசைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். பின்னர், அவருடன் இருக்கும் இரு நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து என்னைக் காரில் கடத்தினர். ஓடும் காரில் வைத்தே பாலியல் ரீதியாக மூவரும் துன்புறுத்தினர். தொடர்ந்து, மயக்க நிலையில் நான் வீட்டின் வெளியே வீசப்பட்டேன். இது தொடர்பாக, கப்தங்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாரளித்தும் முதலில் ஏற்கவில்லை. மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பின் தான் எஃப்ஐஆர் பதியப்பட்டது” என்றார். இதையடுத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம் பெண்; அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
young woman misbehaves with a college student

சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 20 வயதான மாணவி ஒருவர் பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கிப் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் இருந்த 26 வயதான இளம்பெண்ணுடன் மாணவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் இரவு நேரத்தில் மது அருந்தியுள்ளனர். 

அப்போது, மாணவிக்கு இளம்பெண் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து, பின்னர் அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரடமைந்த அந்தப் பெண் மாணவி குளிக்கும் போது அவரை ஆபாசமாகப் படம் பிடித்து ஓரினச்சேர்க்கைக்கு மீண்டும் அழைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இளம்பெண் எல்லையை மீறிப்போக, அதிர்ச்சியில் மாணவி வீட்டை காலி செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் மாணவியிடம் வீட்டை காலி செய்தால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தால் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில்  விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவி கூறியதில் உண்மை இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் இளம்பெண் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஏன் நான் அப்படிச் செய்தேன் என்று புரியவில்லை என்று கூறி என்னை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். இதனையேற்றுகொண்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் அயனாவரம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Next Story

கள்ளச்சாராய எதிரொலி; இண்டு இடுக்குகள் வரை தேடும் போலீசார்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
counterfeit  liquor echo; The policemen are searching till the doors

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பான தேடலில் போலீசார் ஈடுபட்டனர். முன்னதாக தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோரணம் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தமாக 22 பேர் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் போலீசார் இண்டு இடுக்குகளில் எல்லாம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.