Published on 21/07/2024 | Edited on 21/07/2024
கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.
பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கத்தில் இருந்து ஒரு குழு கேரளாவிற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.