Published on 04/12/2021 | Edited on 04/12/2021

இன்று உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதோடு சில முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில், ''பலமுறை நாட்டை ஆட்சி செய்தவர்களிடம் மக்களின் வாழ்வை எளிமையாக்க எந்த திட்டமும் இல்லை. வாக்கு வங்கிக்காக ஒருசில அரசியல் கட்சிகள் ஒருசாரார் மட்டும் பயனடையும் வகையில் சில திட்டங்களை அமல்படுத்தினர்.ஆனால் பாஜக அரசு எந்தப்பாகுபாடுமின்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்களைக் கொண்டு வருகிறது. அனைவருக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதே பாஜக அரசின் குறிக்கோள்'' என்றார்.