/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/r3yq.jpg)
இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டு இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில்கரோனாவால்பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழைவழங்கும் நடைமுறையை எளிமையாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,கரோனா இறப்பு சான்றிதழைவழங்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு தற்போதுவரை கரோனா இறப்பு சான்றிதழைவழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவில்லை.
இந்தநிலையில்இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காததற்குஅதிருப்தி தெரிவித்ததோடு, "நீண்ட நாட்களுக்கு முன்பே நாங்கள்இதற்கான உத்தரவு பிறப்பித்தோம். ஒருமுறைகால அவகாசத்தையும் நீட்டித்தோம். நீங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி முடிக்கும்போது கரோனா மூன்றாவது அலையே முடிந்துவிடும்" எனக்கூறினார்.
இதற்குபதிலளித்த மத்திய அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் முடிவடைந்துவிடும் எனத்தெரிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதிக்குள் கரோனாஇறப்பு சான்றிதழை வழங்குவதை எளிமையாக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)